\
திண்டுக்கல்லில் 8 ஆண்டுக்கு பிறகு நாளை ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்லில் 8 ஆண்டுக்கு பிறகு நாளை ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்லில் 8 ஆண்டுக்கு பிறகு நாளை ஜல்லிக்கட்டு
Published on

திண்டுக்கல்லை அடுத்த உலகம்பட்டி கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.

உலகம்பட்டி கிராமத்தில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. வாடிவாசல் அமைக்கும் பணிகள், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியின் இரண்டு புறமும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலகம்பட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டில் திண்டுக்கல் ,திருச்சி, மதுரை , அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை , தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 முதல் 400 காளைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் கலந்து கொள்கின்றனர். உலகம்பட்டி ஜல்லிக்கட்டுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com