"ரொம்ப அருமையான வேலை பண்ணிருக்கீங்க" பேரவையில் குஷியான திண்டுக்கல் சீனிவாசன் .. எதற்காக தெரியுமா?

தன் வெகுளி பேச்சால் அவையை சிரிப்பில் ஆழ்த்தினார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
TN Assembly
TN AssemblyFile image

சட்டப்பேரவையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள e-book முறையின்படி, அமைச்சர்கள் பேசிய பதில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன் உள்ள தொடுதிரை கணினியிலும், பேரவையில் உள்ள 4 பெரிய திரைகளிலும் முதன்முறையாக காட்டப்பட்டது.

இது அமல்படுத்தப்பட்டதும் முதலாவதாக முதலமைச்சர் பேசியது காட்டப்பட்டது. அதனையடுத்து உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ஐயப்பனின் கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்தது காட்டப்பட்டது. அவரையடுத்து துணைக் கேள்விக்காக பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பேச்சினூடே பெரிய திரைகளில் தானும் வருகிறேனா என பார்த்துக்கொண்டே பேசினார். அப்போது இடையே பேசிய சபாநாயகர், "உங்களோட எல்லா படமும் வந்துள்ளது" என்றார்.

TN Assembly
TN Assembly@Aloor Sha Navas, Twitter

அப்போது திண்டுக்கல் சீனிவாசன், "எங்களுக்கு பக்கமா இருக்கிறது. அதான் பார்த்து பேசுறேன். புதுசா இன்னைக்கு அறிவிச்சு இருக்கீங்க. அதுல என் படமும் வந்துள்ளது. ரொம்ப நன்றி! அருமையான வேலையை பேரவை தலைவர் செய்துள்ளார். எல்லாருக்கும் நன்றி. எங்க எங்க பார்க்கலாம் அப்படின்னு தெரியல" என வெகுளியாக பேசினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், "இது இங்க மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதும் பார்க்கலாம்.. உலகம் முழுக்க பார்க்கலாம்.." என்றார். இதனையடுத்து பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகன், "திண்டுக்கல் சீனிவாசன் துணைக்கேள்வி எழுப்பியதும் அவரது படம் அதில் வருகிறதா என பார்த்துக் கொண்டே பேசுகிறார்" என்றதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com