“எங்கே சென்றிருந்தாலும் ஒபிஎஸ்-க்கு தோல்விதான்!” - அதிமுக பொருளாளர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் இருந்து தேவரின் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார்.
தேவரின் தங்க கவசம்:
தேவரின் தங்க கவசம்:புதிய தலைமுறை

மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு காரில் எடுத்து செல்லப்பட்டது.

தேவரின் தங்க கவசம்:

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.

தேவரின் தங்கக்கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் தங்கக்கவசம் அணிவிக்கப்படும்.

தேவரின் தங்க கவசம்
தேவரின் தங்க கவசம்முகநூல்

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாளும் வங்கிக்கு நேரில் சென்று கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.

இந்நிலையில் அதிமுகவில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே எழுந்த ஒற்றைத்தலைமை பிரச்சனையை அடுத்து இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் நீக்கப்பட்டு இபிஎஸ் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்தாண்டு பசும்பொன் தேவர் தங்கக்கவசத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் முகநூல்

அதனடிப்படையில் கட்சி விதிப்படி அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளரே நிர்வகிப்பதால், கட்சியின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து வங்கியில் உள்ள தங்க கவசத்தை எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

அதை ஏற்று இன்று மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் இருந்து தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்று பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் வழங்கினார்.

தேவரின் தங்க கவசம்:
அதிமுக விமர்சிக்கும்போதும் பாஜக அமைதி காப்பது ஏன்? - விளக்கும் கரு.நாகராஜன்

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், மணிகண்டன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் காவல்துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யனை காவல்துறையினர் வங்கிக்குள் அனுமதிக்க மறுத்ததால் அதிமுகவினர் காவல்துறையோடு வாக்குவாதம் செய்தனர்.

தேவரின் தங்க கவசம்
தேவரின் தங்க கவசம்PT

தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்கே சென்றிருந்தாலும் ஒபிஎஸ் தோல்வியைதான் சந்தித்து இருப்பார். தங்கக்கவச விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் தோல்வி கிடைக்கும் என்பதால் ஓபிஎஸ் வழக்கு தொடுக்கவில்லை. தேவர் குருபூஜை விழாவில் இபிஎஸ் கலந்து கொள்ள இருக்கிறார்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com