6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமா? - திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு

6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமா? - திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு
6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமா? - திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 6-ம் தேதி நடைபெறும் என்ற தகவல் பொய்யானது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாடி, முள்ளிப்பாடி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளான கழிவு நீரோடை, சிமெண்ட் சாலை, சிறிய பாலம் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் முதலமைச்சர் கலந்துகொண்ட காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு தற்போது தான் திண்டுக்கல் வருகிறேன். எம்எல்ஏவான எனக்கு இதுவரை 6ஆம் தேதி கூட்டம் நடப்பது தொடர்பான எந்த தகவலும் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து வரவில்லை. உங்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து பேசுகிறேன்” எனத் தெரிவித்தார்.

அதன்படி அனைவரது முன்னிலையிலும் போன் செய்து பேசிவிட்டு 6ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் உள்ளது என்பது பொய்யான தகவல் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com