Police station
Police stationpt desk

திண்டுக்கல் | பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு – போலீசார் விசாரணை

வேடசந்தூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் பணம் திருடு போன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Published on

செய்தியாளர்: திவ்யஸ்வேகா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகர் அருகே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்நாத் (38) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர்கள் வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று கணவன் மனைவி இருவரும் தங்களது கடைக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

Police station
பெட்ரோல் குண்டு வீச்சு வீடியோ - பிரபல ரவுடி வெள்ளைக்காளி ஆதரவாளர்களால் மதுரையில் பரபரப்பு

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளெ சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஆறரை பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com