திண்டுக்கல் | சிறைக்குச் செல்லும் வழியில் போக்சோ குற்றவாளி தப்பியோட்டம்
செய்தியாளர்: J.அருளானந்தம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியைச் சேர்ந்தவர் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்ற ராமு (25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வினித், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக, செம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தலைமை காவலர் ஆரோக்கியசாமி ஆகியோர், வினித்தை சிறையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர். பின்னர் மீண்டும் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த வினித் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார், தப்பியோடிய வினித்தை தேடி வருகின்றனர்.