வேடசந்தூர்: பிறந்து 5 நாட்களே ஆன பெண்குழந்தை மர்மமான முறையில் மரணம்; தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை!

வேடசந்தூரில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடம்
குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடம்PT WEB

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பில்லக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தீபா 3-வதாக முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. பின்னர் சிகிச்சை பிறகு தீபா பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல் பில்லக்காபட்டிக்கு கொண்டுவரப்பட்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் முருகவேல் வீட்டின் அருகே புதைக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சென்ற ஆர்.கோம்பை கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, போலீசார், வேடசந்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திலேயே உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளதா? அல்லது பெற்றோரே கொலை செய்து புதைத்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்த 5 நாட்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பேரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com