திண்டுக்கல்:”அபகரித்த நிலத்தை மீட்டுத்தாங்க”.. கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திண்டுக்கல்:”அபகரித்த நிலத்தை மீட்டுத்தாங்க”.. கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திண்டுக்கல்:”அபகரித்த நிலத்தை மீட்டுத்தாங்க”.. கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திண்டுக்கலில் சுதந்திரப் போராட்ட தியாகியின் நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் அபகரித்ததாகக் கூறி, கலெக்டர் அலுவலகத்தில் கணவன் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மக்கான் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். சுதந்திரப் போராட்ட தியாகியான இவருக்கு தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் அடுத்துள்ள வாழைக்காய்பட்டி பிரிவின் அருகே ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே காதர் மைதீன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பித்தளை பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவர் போலி பத்திரம் தயார் செய்து சுதந்திரப் போராட்ட தியாகி காதர்மைதீனின் ஒரு ஏக்கர் நிலத்தை தனது மனைவி சித்ரா பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த காதர் மைதீனின் மகன் சையது இப்ராஹிம், மாவட்ட பத்திரப்பதிவாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என பலரிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சையது இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி ரஷிதா பேகம் ஆகியோர் இன்று 06.02.23 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com