திண்டுக்கல் | கர்ப்பமாக இருந்த சிறுமி - விரக்தியில் தாயை தொடர்ந்து தந்தையும் விபரீத முடிவு
செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், இந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது சிறுமியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.