தமிழ்நாடு
திண்டுக்கல்: கதவை உள்புறமாக தாழிட்ட குழந்தை: 2 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு
திண்டுக்கல்: கதவை உள்புறமாக தாழிட்ட குழந்தை: 2 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு
திண்டுக்கல்லில் கதவு தாழிட்ட நிலையில் வீட்டுக்குள் 2 மணி நேரம் அடைபட்டு இருந்த ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மெங்கில்ஸ் சாலையில் வசிக்கும் வங்கி மேலாளரான சிவகாமிநாதன் பணிக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி அண்டை வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது ஒன்றரை வயது குழந்தை ஆஷிவ் அதர்வா வீட்டுக்குள் இருந்தபடி, உள்பக்கமாக கதவை தாழிட்டுள்ளான். வெளியே வர முடியாதால் கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் தாயும் அக்கம்பக்கத்தினரும் கதவைத் திறக்க முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் நவீன கருவி மூலம் அரைமணி நேரம் போராடி கதவைத் திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.