எனது மகளின் இறப்புக்கு யார்தான் காரணம்? - திண்டுக்கல் சிறுமியின் தந்தை கவலை
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல்லில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மின்சாரம் ஏற்றிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் கிருபானந்தன் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
தன்னுடைய ஒரே மகளின் கொடூரக் கொலைக்கு யார்தான் காரணம் என அந்த சிறுமியின் தந்தை வெங்கடாச்சலம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். தனது மகளுக்கு நீதிகிடைக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதிகேட்டு முடிதிருத்தும் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் பெற்றோரும், மாதர் சங்கமும் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.