\
செப்.7-இல் ஆளுநரை சந்திக்கிறார் தினகரன்

செப்.7-இல் ஆளுநரை சந்திக்கிறார் தினகரன்

செப்.7-இல் ஆளுநரை சந்திக்கிறார் தினகரன்
Published on

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் செப்டம்பர் 7-ம் தேதி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று அவரை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து தனித்தனியாக மனு அளித்து இருந்தனர். 

இந்த நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

பழனிச்சாமி தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தியுள்ள நிலையில், தினகரன் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆளுநரும் அதற்கு நேரம் ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தினகரன் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. 

முன்னதாக, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com