தமிழ்நாடு
"ஜெயலலிதா கனவை தினகரனும் நிறைவேற்றுவார்"- அமமுகவுக்கு பாஜக சூசக அழைப்பு?
"ஜெயலலிதா கனவை தினகரனும் நிறைவேற்றுவார்"- அமமுகவுக்கு பாஜக சூசக அழைப்பு?
சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது என பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை திநகர் கமலாலயத்தில் பாஜக தமிழக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுகதான். ஜெயலலிதாவின் கனவை அதிமுக - பாஜக கூட்டணி நிறைவேற்றும். ஜெயலலிதாவின் கனவை டிடிவி தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
தினகரன் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பாரே என்ற கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என பதிலளித்தார்.