\
தினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்

தினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்

தினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்
Published on

சென்னையில் நடத்தப்பட்ட 3 நாள் விசாரணையை அடுத்து டி.டி.வி.தினகரனுடன் போலீசார் இன்று டெல்லி திரும்புகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதிமுக அம்மா அணியின் டிடிவி .தினகரன் முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 25-ம் தேதி டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்ட தினகரனையும் மல்லிகார்ஜுனாவையும் சென்னையில் வைத்து கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் நடந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தினகரனுடன் போலீசார் டெல்லி திரும்புகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com