ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளார் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை ஆர்.கே.நகருக்கு கடந்த டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அம்மனுவில், சுயேட்சை வேட்பாளரான தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. தினகரனுக்கு சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. ஆர்.கே.நகரில் ரூ.30 லட்சம் அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு முதல் வழக்காக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.