காங்கிரஸில உள்ள கோபத்தை நேருமேல காட்டுறது சரியில்லை-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

காங்கிரஸில உள்ள கோபத்தை நேருமேல காட்டுறது சரியில்லை-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
காங்கிரஸில உள்ள கோபத்தை நேருமேல காட்டுறது சரியில்லை-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘நேருமேல இத்தனை கோபம் ஏன்? ஏன் குறிவைக்கப்படுகிறார் நேரு?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

நேரு இந்திய நாட்டை ஒரு மதசார்பற்ற நாடாகவும், எல்லோரும் விரும்பவும்- வசிக்கவும் கூடிய நாடாகவும், இந்துத்துவ வெறியற்ற நாடாகவும் கட்டமைக்க விரும்பினார்! அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டார். எனவே இப்போதைய இந்து-இந்துத்துவ வெறியர்கள் கோபத்திற்கும்-குறிவைப்பிற்கும் ஆளாகியுள்ளார்!

மன்னர் கால வாரிசு அரசியலில் இரண்டாம்,மூன்றாம் தலைமுறை வாரிசு திறமையில்லாமல் இருந்தாலும் ஆறாம் தலைமுறை வாரிசு திறமையான ஆட்சி செய்த வரலாறு படிக்க ஏற்புடையதாக இருக்கலாம்,இ ப்போது மக்களாட்சி நடக்கிறது. "ஒரே குடும்பம் ஒரே தலைவர்" ஃபார்முலா ஏற்கபடாது, எந்த நாட்டிலும் வாரிசு அரசியல் நடப்பது அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு பேராபத்தாக முடியும்..முடிந்திருக்கும்...

அவர் நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்காமல் சென்று விட்டார். அது தான் கோபம். அவர் உருவாக்கி இருந்தால் நாங்கள் விற்க உதவியாக இருக்கும்

நம்மிடம் தான் நல்லது செய்த ஒரு செயலுமில்லை. அதனால் அடுத்தவரை குறை சொல்லி கவனத்தை திசை திருப்பும் செயல்

"காங்கிரஸில உள்ள கோபத்தை.. நேருமேல காட்டுறது சரியில்லை...! “

ஒருவர் உருவாக்கிய ஜனநாயக கட்டமைப்பை குலைக்கணுமா? அல்லது உருவாக்கிய சொத்துக்களை விற்கணுமா? அவரைப் பற்றி பொய்களையும் வதந்திகளையும் பரப்பணும். Rss, bjp யின் சித்தாந்தங்களில் ஒன்று. பொய்யை மூலதனமாகக் கொண்டு ஆட்சியை பிடித்த இவர்கள் உருப்படியா எதாவது நாட்டுக்கு செய்திருந்தால்தானே செய்ததை சொல்வார்கள்?

Because Pandit Nehru was the first PM of the independent India for about 1.5 decades succeeded by his daughter for another one decade. If they had been clear/firm on "India for Hindu" (like Jinna), the necessity of BJP would have been obselete today?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com