அதிமுகவிடம் பழைய போராட்ட குணம் இல்லை! - வாசகர்களின் கமெண்ட்ஸ்! #Like#Dislike
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 12ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சசிகலா பொதுச்செயலாளர் இல்லை - நீதிமன்றம் தீர்ப்பு; சசிகலா இல்லாமல் அதிமுகவின் எதிர்காலம் என்ன?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
அதிமுகவுக்கு சசிகலா தேவையில்லை. தற்போது அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. ஏற்கனவே தின்ற ருசி தான், அதிமுகவுக்குள் நுழைவதற்கான ஆசை. ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த இவரை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஏனெனில் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் மக்கள் பணம்.
சசிகலா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுகவை ஆட்டுவிக்கும் ஆளுமையாக பாஜகவே விளங்குகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம் என்று சசிகலாவே கூறியுள்ளார். அதிமுக பாஜகவின் பிடியிலிருந்து விலகி, அமமுகவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அதை அதிமுகவுடன் இணைத்தால் எதிர்காலம் உண்டு
சசிகலா இல்லாமல் அதிமுகவின் எதிர்காலம் சந்ததேகம்தான்.. ஒரு உறையிலே இரண்டு கத்தி இருக்ககூடாதுன்னு சொல்வாங்க.. ஒரே கத்தி சசிகலாதான்..சரி... !”.
அதிமுகவிடம் பழைய போராட்ட குணம் இல்லை.. திமுக அதிமுகவை கண்டு கொள்வதே இல்லை.. அவர்களின் முழு நேர எதிரியாக பாஜகவையே நினைக்கிறார்கள்.. அதற்கு அண்ணாமலை அவர்களின் குடைச்சலே காரணம்..
எதிர்காலத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு, அதிமுக நிகழ்காலமே மோசமாகவே உள்ளது என்பதை தலைவர்கள், நிர்வாகிகள் உணர்கிறார்கள். எல்லோரும் இணைந்த வலிமையான அதிமுகவே திமுகவை வீழ்த்த ஒரே வழி.
தொண்டர்கள் நடத்தும் கட்சியில் தலைமைக்கு பஞ்சமில்லை.
அஇஅதிமுக மக்களுக்கான இயக்கம் இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழக சட்டசபையில் அதற்குரிய இடம் இருக்கும். தனித்து நின்று அப்போதும் ஆட்சியை பிடிக்கும். ஓபிஎஸ் , இபிஎஸ் ஓய்வு பெற்றாலும் அஇஅதிமுக வெற்றி பெறும். அஇஅதிமுகவின் அஸ்திவாரத்தை அந்த அளவுக்கு பலப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .