\
16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து - தமிழக அரசு

16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து - தமிழக அரசு

16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து - தமிழக அரசு
Published on

தமிழகத்தில் 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்துக்கு உயர்த்தி தமிழக அரசு உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-க்களாகவும், மாநகரங்களில் துணை ஆணையர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில், தற்பொழுது அவர்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் பணியிட மாற்றங்களின்போது இவர்கள் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு பெற்று பணியைத் தொடங்குவார்கள் என தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com