தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு
Published on

பாப்பிரெட்டிபட்டி அருகே குருமன்ஸ் இன மக்கள் தலையில் தேங்காய் உடைத்து பாரம்பரிய திருவிழா நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் பையர்நத்தம் கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பழங்குடி குருமன்ஸ் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தங்களுடைய பாரம்பரிய திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்த பாரம்பரிய திருவிழாவில் இராஜகுலம், சாமந்தி குலம், எருமைக் குலம், வண்டிகாரன் குலம் உள்ளிட்ட குலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குல தெய்வமாக வழிபடும் வீரபத்திரன் சாமிக்கு ஆடி முதல் நாளிலிருந்து 18-ம் நாள் வரை விரதம் இருந்து திருவிழா நடத்தினர். குருமன்ஸ் இன மக்களின் அனைத்து குல உறவினர்களும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் பாரம்பரிய தொழிலான ஆடுமேய்த்தல், கம்பளி நெய்தல், உள்ளிட்டவைகளை நினைவுப்படுத்தும் விதமாக  குலகாவல் தெய்வம் வீரபத்திரன் சாமியை வழிபட்டு படையல் வைத் து பின்பு அனைத்து பக்தர்களும் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து  சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாட்டையால் அடி வாங்கினால் குலம் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் சாட்டையடி வாங்கினர். இந்த குருமன்ஸ் பழங்குடி பாரம்பரிய திருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com