சங்கராபுரம்: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் குழந்தை உயிரிழந்ததா? - போலீசார் விசாரணை

சங்கராபுரம்: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் குழந்தை உயிரிழந்ததா? - போலீசார் விசாரணை

சங்கராபுரம்: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் குழந்தை உயிரிழந்ததா? - போலீசார் விசாரணை
Published on

சங்கராபுரம் அருகே வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை குடித்து மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் பாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய தாய் லட்சுமியும் மகள் ரச்சனா லட்சுமியும் தனது வீட்டிற்கு எதிரே கிடந்த குளிர்பானத்தை எடுத்து வந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடித்துள்ளனர். இதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிறுமி ரச்சனாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் சத்யராஜின் தாய் லட்சுமி மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இவர்கள் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இவர்களுடைய வீட்டின் முன் விஷம் கலந்த குளிர்பானத்தை வீசிச் சென்றது யார் என்று வடபொண்பரப்பி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com