-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே இருந்ததுள்ளதாம்! பின்ன ஏன் இப்போ இப்படி?!

-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே இருந்ததுள்ளதாம்! பின்ன ஏன் இப்போ இப்படி?!
-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே இருந்ததுள்ளதாம்! பின்ன ஏன் இப்போ இப்படி?!

கடந்த சில தினங்களாக சென்னையில் வெப்பநிலை 22 டிகிரி என்று இருந்து வருகிறது. கொடைக்கானல், ஊட்டி போல சென்னையும் குளுகுளுவென இருப்பதாக சொல்லி, இணையவாசிகள் சிலாகித்து கொண்டிருக்கிறனர். `நம்ம சென்னையா இது’ என கேட்காத சென்னைவாசிகளே இருக்கமுடியாத அளவுக்கு, சில்லென்ற சென்னையாக இருக்கிறது தலைநகர்! ஆனால் வரலாற்றை அறிந்தவர்கள், சென்னையை பற்றி இப்படி வியக்கமாட்டார்கள். ஏனெனில், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்ரே அவ்வப்போது பனிப்பொழிவை அனுபவித்து வந்துள்ளது சென்னை (எ) மெட்ராஸ். அப்போது மெட்ராஸில் -3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக இருந்தது என நாங்கள் சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறதாம்!

கோடையில் கொளுத்தும் வெப்பத்திற்கு பெயர் பெற்ற இன்றைய சென்னையில், குளிர் மற்றும் உறைபனி காலம் இருந்தது என்பதை கற்பனை செய்வதே கடினம். ஆனால் அந்தகாலத்து `மெட்ராஸ்’, அடிப்படையில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு தாயகமாக இருந்தது என்பதுதான் உண்மை.

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸில், குறிப்பாக ஏப்ரல் 1815 இன் கடைசி வாரத்தில் வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைந்தது. 19ம் நூற்றாண்டில், குளிர்பனிக்காலம், குறிப்பாக -3 டிகிரியில் உறைபனி காலமும் இருந்திருக்கிறது. அப்போது மூன்று பருவங்களை மட்டுமே அறிந்த ஒரு நகரமான மெட்ராஸ், இப்போதுதான் சூடான, வெப்பமான மற்றும் நரகமான மாநகரமாக மாற்றமடைந்துள்ளதாம்.

தி இந்துவின் ஒரு அறிக்கையின்படி, இந்தோனேசியாவில் உள்ள தம்போரா மலையின் எரிமலை வெடிப்புதான் சென்னையின் குளிர்ந்த வானிலைக்கு காரணம் என தெரிகிறது. இந்த நிகழ்வை `TamboraThe Eruption That Changed The World’ என்ற பெயரில் Gillen D'Arcy Wood' என்பவர், விவரித்துள்ளார். தி இந்து தரும் தகவலின்படி, 1815 ஏப்ரல் 24 (திங்கள்கிழமை) காலை வெப்பநிலை 11 டிகிரி என்றும்; 1815 ஏப்ரல் 28 (வெள்ளிக்கிழமை) மைனஸ் 3 டிகிரி செல்ஸியஸ் என குறைந்துள்ளதாம்! இதுபற்றிய முழுமையான தரவுகள் இல்லாததால், இது சற்று மிகையானதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும்கூட, அப்போது மிக குறைந்த அளவில்தான் வெப்பநிலை இருந்திருக்கிறது என்பது உண்மை. 

தம்போரா எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட தூசி, மேகங்களுக்கு மேலே முக்காடு போட்டதுபோல் இருந்தது. மேல் வளிமண்டலத்தின் காற்றில் மேற்கு நோக்கி அதன் சறுக்கலைத் தொடங்கியது. இந்தியாவுக்கான அதன் காற்றோட்டப் பாதை, கீழே உள்ள ஆயிரக்கணக்கான நீர்வழிக் கப்பல்களை ஒரே மாதிரியான பாதையில் வளைத்து வைத்து வர்த்தகக் காற்றைத் தூண்டியது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மெட்ராஸ், அதன் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை விளைவித்தது. சூரியன் மற்றும் பூமியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சும் எரிமலை மேகத்தில் உள்ள ஏரோசோல்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் பியூமிஸ் கற்கள் கடற்கரை ஓரங்களில் கரை ஒதுங்கியது. இது ஒரு விசித்திரமான நிகழ்வு என்றபோதிலும், இதுபற்றி ஒரு சம்பவம் கூட பதிவு செய்யப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையையும் யாரும் குறிப்பிடவில்லை. இருப்பினும், அதிக பாதிப்புகளை அது ஏற்படுத்தியது. சாம்பல் மேகம், உலகம் முழுவதும் பரவியது.

1816 ஆம் ஆண்டு இந்தியாவில் பெய்த பருவமழையால் பயிர்கள் சேதமடைந்தன. கொள்ளை நோய்கள் பேரழிவை ஏற்படுத்தியது. எரிமலை வெடிப்பால் உலகம் முழுவதும் 70,000 பேர் உயிரிழந்தனர். 'ஆகஸ்ட் 1815 இல், பிரிக் கேத்தரினா - வெடிப்புக்குப் பிறகு ஜாவாவிலிருந்து முதல் கப்பல் - மெட்ராஸ் வந்தடைந்தது. அதில் வந்த நபர் கொண்டுவந்த எரிமலை சாம்பலை மேலதிக ஆய்வுக்காக கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால், மெட்ராஸில் ஏற்பட்ட பெரிய உறைபனியை யாரும் எரிமலையுடன் இணைக்கவில்லை.

மெட்ராஸ் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டிருந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எழுதப்பட்ட வரலாற்றில் இதை யாரும் பதிவு செய்யவில்லை என்றாலும், இது இன்னும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றைய சென்னை வானிலைக்கே சிலாகிக்கும் நம்மிடம், வரலாறு ஒருமுறை `அடிக்கவே இல்ல, அதுக்குள்ள அலர்றியே’-ன்னு சொல்வதுபோல இருக்குல்ல...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com