கஜபூஜை என அனுமதிபெற்று அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல விழாவிற்கு பயன்படுத்தப்பட்ட யானைகள்?

கஜபூஜை என அனுமதிபெற்று அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல விழாவிற்கு பயன்படுத்தப்பட்ட யானைகள்?

கஜபூஜை என அனுமதிபெற்று அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல விழாவிற்கு பயன்படுத்தப்பட்ட யானைகள்?

கஜபூஜைக்கு அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டது என ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரான பி.மூர்த்தியின் மூத்த மகன் தியானேஸ் திருமண விழா மதுரை பாண்டிகோவில் கலைஞர் திடலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சர்ச்சையை ஏற்பட்டது. இந்த விழாவில் முதல்வரை வரவேற்கும் வகையில் கேரளாவில் இருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற இரண்டு ஆண் யானைகளை கொண்டு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது,

தனியார் விழாக்களில் யானைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் மகன் திருமண விழாவிற்கு யானை எப்படி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், `வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா?' என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு, அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு “கேரளா மாநிலத்தில் இருந்து, மதுரைக்கு கஜபூஜைக்காக இரண்டு யானைகள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டது” எனவும் பதில் அளித்துள்ளனர்.

மேலும் மதுரையில் 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகளை கண்காணிக்க மதுரை வன சரகம் சார்பாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவி விவரங்களை தகவலாக தர வேண்டும் என கேட்டதற்கு, `மதுரை வனக்கோட்ட வன உயிரினசரக வனச்சரக அலுவலர்’ என பதில் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சரை வரவேற்க, கஜபூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கேரளா வனத்துறையை ஏமாற்றி தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் சட்ட விரோதமாக தமிழக முதலமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20-ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திருமணம் ஏற்பாடு செய்து கோடிக்கனக்கான ரூபாய் செலவு செய்து சர்ச்சைக்கு ஆளான அமைச்சரின் திருமணத்திற்கு யானைகள் கொண்டு வரப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்ற போது அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com