சாலையை கடக்கும் செந்நாய் கூட்டம்: பயம் கலந்த மகிழ்ச்சியில் கண்டு மகிழும் மக்கள்

சாலையை கடக்கும் செந்நாய் கூட்டம்: பயம் கலந்த மகிழ்ச்சியில் கண்டு மகிழும் மக்கள்

சாலையை கடக்கும் செந்நாய் கூட்டம்: பயம் கலந்த மகிழ்ச்சியில் கண்டு மகிழும் மக்கள்
Published on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில் சாலையை கடக்கும் செந்நாய் கூட்டங்களை கண்டு சுற்றுலா பயணிகள் பயம் கலந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்‌றனர்.

பெரியார் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதி நுழைவு வாயிலில் இருந்து தேக்கடி ஏரி வரை செல்ல தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாகன போக்குவரத்து குறைந்ததால், அடிக்கடி வன விலங்குகள் சாலையை கடக்கின்றன. இதனை காணும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் அரிதாகவே தென்படும் செந்நாய் கூட்டம், தேக்கடி வனச்சாலையில் கூட்டமாய் ஒன்றன்பின் ஒன்றாக கடப்பதை காண முடிகிறது. இந்நிலையில் வனச்சாலையில் சைக்கிளில் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com