\
கொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி

கொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி

கொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி
Published on

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தருமபுரி பச்சை மண்டலமாகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 12,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டாலும், சில மாவட்டங்களில் குறைந்த அளவே பாதிப்பு இருக்கிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அந்த 5 பேரும் சிகிச்சை பலன் பெற்று கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாகத் தருமபுரி மாறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com