வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இளம் பெண் குடும்பத்துடன் தர்ணா

வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இளம் பெண் குடும்பத்துடன் தர்ணா
வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இளம் பெண் குடும்பத்துடன் தர்ணா

லால்குடி மகளிர் காவல் நிலையம் முனபு; இளம்பெண் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லால்குடி அனைத்து காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை குறித்து கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் அவரது கைக்குழந்தை மற்றும் பெற்றோருடன் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கடந்த 7 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் கணவர், மாமனார் மற்றும் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்னா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சூளை பகுதியைச் சேர்ந்த கந்தவேல் என்பவரின் மகன் பொறியியல் பட்டதாரியான பிரசாந்த் (27). என்பவருக்கும் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து திருமணமாகி 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு கர்நாடக மாநிலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரசாந்த், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தது குறித்து அவரது செல்போனில் பதிவு செய்திருந்துள்ளார்.

இது குறித்து அபர்னா, பிரசாந்திடம் கேட்டதற்கு அபர்னாவை அடித்து உதைத்த பிரசாந்த், அவரை நெய்குப்பை கிராமத்தில் உள்ள அபர்னாவின் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். மேலும் அபர்னாவின் பெற்றோர்களிடம் வரதட்சனை கொடுத்தால் தான் உங்கள் பெண்ணோடு சேர்ந்து வாழ்வேன் எனக்கூறி அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அபர்னா, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அபர்னா தனது ஒரு வயது பெண் குழந்தை. மற்றும் அபர்னாவின் பெற்றோருடன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கார்த்திகாயனி-யை கண்டித்து காவல்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவலறிந்த லால்குடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் காவல் நிலையத்திற்கு வந்து அபர்னா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அபர்னா குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து லால்குடி அனைத்து மகளிர் போலீசார் பிரசாந்த் மற்றும் அவரது தாய் சரோஜா, தந்தை கந்தவேல் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com