\
தருமபுரி: கோடை வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தருமபுரி: கோடை வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தருமபுரி: கோடை வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுற்றலாவையொட்டிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்கி வெப்பம் வீசுவதால், இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். விடுமுறையை கொண்டாட வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஞாயிறு விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல்லில் கூட்டம் களை கட்டியது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com