தருமபுரி : திருமணத்தை மீறிய உறவை உதறித் தள்ளிய பெண்... குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த இளைஞர்!

தருமபுரியில் குழந்தைகளுக்காகத் திருமணத்தை மீறிய உறவை உதறி தள்ளிய பெண்ணின் 2 குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள்puthiya thalaimurai

செய்தியாளர் - விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் அருகே உள்ள முண்டாசுப்பறவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு தர்ஷன், யஸ்வந்த் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், பிரியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வெங்கடேசன்
கைது செய்யப்பட்ட வெங்கடேசன்

இந்நிலையில் பிரியா, வெங்கடேசனிடம் "இனிமேல் நாம் பழகுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். என் குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்" எனக் கூறியுள்ளார். இதற்கு வெங்கடேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரியா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், குழந்தைகளைக் கொலை செய்து விடுவதாக வெங்கடேசன் மிரட்டியுள்ளார். பிரியா கடைசி வரை தன் முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

உயிரிழந்த குழந்தைகள்
மலேசியாவில் தமிழக இளைஞரைத் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!

இந்தச் சூழலில் இன்று வெங்கடேசன், பிரியா வீட்டிற்குச் சென்று யாருக்கும் தெரியாமல் இரண்டு குழந்தைகளையும் வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் முண்டாசுப்புறவடை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 2 சிறுவர்களையும் கொலை செய்துள்ளார்.

பின் ஊருக்குள் சென்ற அவர், இரண்டு சிறுவர்களையும் முகமூடி அணிந்து வந்த வடமாநில இளைஞர்கள் கடத்தி சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

ஒருகட்டத்தில் வெங்கடேசன் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வெங்கடேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் வெங்கடேசனுக்கும், சிறுவர்களின் தாய்க்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதும், இதற்கு இடையூறாக இருந்த குழந்தைகளை அவர் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தைகள்
சென்னை: நண்பனை கொலை செய்து வீடியோ எடுத்து அனுப்பிய இளைஞர் - 20 நாட்கள் கழித்து உடலை மீட்ட போலீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com