Smart classpt desk
தமிழ்நாடு
தருமபுரி | சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை, ஆய்வகம் அமைத்துக் கொடுத்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனுக்காக தங்களது சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைத்து கொடுத்துள்ளனர்.
செய்தியாளர்: செ.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளது போதகாடு கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர் பாரதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தித் தந்தார்.
Smart classpt desk
இதற்கான செலவை பள்ளி ஆசிரியர்களே பகிர்ந்து கொண்டனர். ஸ்மார்ட் வகுப்பறைகள், சோலார் மின்சக்தி தகடுகள், கண்காணிப்பு கேமராக்கள், கணித ஆய்வகம், நவீன கழிப்பறை என தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் இங்கு இருப்பதற்கு தன்னலமற்ற ஆசிரியர்களே காரணம் என்கின்றனர் மாணவர்கள்.
இந்நிலையில், மாணவர் சேர்க்கை உயர்ந்து வருவதால், நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.