ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கால்வாய் இடிந்தது

ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கால்வாய் இடிந்தது
ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கால்வாய் இடிந்தது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள செங்கன்பசுவந்தலாவ் ஏரியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சோதனை ஓட்டத்தின் போது இடிந்தது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சின்னாறு அணையிலிருந்து செங்கன்பசுவன்தலாவ் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இங்கிருந்து சுமார் 8கி.மீ தூரத்திற்கு புதியதாக கால்வாய் கட்ட, கடந்த 2014-ம் ஆண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ஏரியின் கட்டுமான பணி நிறைவடைந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக, சின்னாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதில் செங்கன்பசுவந்தலாவ் ஏரியும் நிரம்பியது. இதனையடுத்து கால்வாயில், சோதனை ஓட்டம் செய்யும் அடிப்படையில் வினாடிக்கு 30 கன அடி விதம் தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே கட்டப்பட்ட 100 அடி நீள சிமென்ட் கால்வாய் இடிந்து விழுந்தது. கம்பிகள் பயன்படுத்தாமல் வெறும் மணல், சிமென்ட் கலவையால் கட்டப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com