தருமபுரி: நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி

தருமபுரி: நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி

தருமபுரி: நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி
Published on

தருமபுரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒருசிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இதனால் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் பரிசோதனை செய்துள்ளனர். இதில், ஒரு உதவி ஆய்வாளர், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 3 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய வளாகத்தில் குடியிருக்கும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com