\
தருமபுரி: சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

தருமபுரி: சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

தருமபுரி: சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா
Published on: 

தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 330-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, மலர்மாலை, பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் அனைவருக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர், தக்காளி சாதம், புளி சாதம், கொத்தமல்லி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்களுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் தருமபுரி எம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com