”திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்”- தருமபுரி வேட்பாளர்கள் போராட்டம்

”திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்”- தருமபுரி வேட்பாளர்கள் போராட்டம்
”திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்”- தருமபுரி வேட்பாளர்கள் போராட்டம்

தருமபுரியின் பாலக்கோட்டில், தங்களின் வேட்பு மனுக்களை காரணமில்லாமல் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு வேட்பாளர்கள் சிலர் புகார் கொடுக்க வந்தனர். புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து நேற்றிரவு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைப்பெற்று வந்தது. அப்படியான நிலையில் இவ்விஷயத்தில் அதிமுக மற்றும் சுயோட்சை வேட்பாளர்களின் கையெழுத்து போலியாக கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்பட்டு, அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் திமுக நகர செயலாளர் இருப்பதாக வேட்பாளர்கள் கூறியுள்ளனர். திமுக நகர செயலாளரும், 17 வது வார்டு வேட்பாளருமான முரளி, தேர்தல் அதிகாரிகளிடம் சில வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க வைத்ததாக அவர்கள் புகார் முன்வைத்தனர்.

குறிப்பாக 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் யாகுப்கான், 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மேத்தாப், 11வது வார்டு அதிமுக வேட்பாளர் பரியாஸ் ஆகியோரது வேட்பு மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அவர்களை கண்டித்து வேட்பாளர்களும் பொதுமக்களும் நேற்றிரவு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர். இவர்களில் வாா்டு 4 மற்றும் 5ம் வாா்டில் திமுக உறுப்பினா்கள் சீட் கிடைக்கததால் சுயோட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் வாபஸ் பெற கடைசி நாள் என்பதாலும், அதன் பின்னரும் சின்னம் ஒதுக்கப்படமால் நிராகாிக்கப்பட்டதாலும், வேட்பாளர்கள் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியாிடம் முறையிட சென்றது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்து பதில் அளிப்பதாகக்கூறி ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னதால் வேட்பாளா் மற்றும் வாா்டுக்குட்பட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பில் ஈடுபட்டனா். இதனாலும் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com