காளியப்பன் மரணம் நிலைகுலைய வைத்துள்ளது : நடிகர் தனுஷ் உருக்கம்

காளியப்பன் மரணம் நிலைகுலைய வைத்துள்ளது : நடிகர் தனுஷ் உருக்கம்

காளியப்பன் மரணம் நிலைகுலைய வைத்துள்ளது : நடிகர் தனுஷ் உருக்கம்
Published on

தனது நற்பணி மன்ற தம்பி காளியப்பன் மரணம் நிலைகுலைய வைத்துள்ளதாக நடிகர் தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஏற்கனவே 11 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மோதத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. போராட்டக்காரர்களின் கல்வீச்சில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 10 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில், காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், “துப்பாக்கிச்சூட்டில்  என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலைகுலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com