\
அக்காவின் மறைவுச் செய்தி கேட்டு விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை தனலட்சுமி

அக்காவின் மறைவுச் செய்தி கேட்டு விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை தனலட்சுமி

அக்காவின் மறைவுச் செய்தி கேட்டு விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை தனலட்சுமி
Published on: 

ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்த தனலட்சுமி, அவருடைய அக்கா இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதார்.

ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க டோக்கியே சென்றிருந்த தனலட்சுமியின் அக்காள் கடந்த 12.7.21 அன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் அக்கா இறந்ததை தனலட்சுமியிடம் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று விமான நிலையம் வந்த தனலட்சுமியிடம் தகவலை தெரிவித்த போது துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே கதறி அழுதார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com