விருகம்பாக்கம் பெண் காவலரிடம் அத்துமீறப்பட்ட விவகாரம்: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

விருகம்பாக்கம் பெண் காவலரிடம் அத்துமீறப்பட்ட விவகாரம்: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
விருகம்பாக்கம் பெண் காவலரிடம் அத்துமீறப்பட்ட விவகாரம்: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

“இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தொடங்கி வைத்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டியளித்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் புதிய மின் தூக்கி மற்றும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “கடந்த ஓராண்டில் சாதி மத தனிப்பட்ட பிரிவினரை குறி வைத்து தாக்கும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. காவலர்களின் சிறந்த பணியால் தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. கடந்த ஆண்டில் பணியில் இருந்தோது 250 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுதார்களில் 1,600 நபர்களுக்கு காவல்துறையில் பணிகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 50 இடங்களில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடிகள் உள்ளன. காவல்துறையில் உள்ளோருக்கு மட்டுமின்றி தீயணைப்புத்துறை , வனத்துறை, சிறைத்துறையில் பணி செய்வோரும் அங்கு பொருள் வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் 13 இடங்களில் காவலர் மருத்துவமனைகள் உள்ளன.

காவல்துறையில் இருப்போருக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கடந்த ஆண்டில் உத்தவிட்டுள்ளார். இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 15 நாளுக்கு, ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இரவு ரோந்து காவர்களுக்கு சிறப்புப் படிகளை இந்த ஆண்டு அரசு அறிவித்துள்ளது. பெண் காவலர்களின் பிரச்சனைகளை களைய உடல், மனநல பயிற்சிகளை வழங்க ஆனந்தம் எனும் பயிற்சி வழங்கப்படுகிறது. காவல்துறை மூலம் மாணவர்களுக்கான சிற்பி திட்டம் மூலமும், சென்னை காவலர்களுக்கு மகிழ்ச்சி எனும் திட்டம் மூலமும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் போதைப்பொருள்களை தடுக்க, தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்தி வருகிறோம். போதைக்கடத்தலில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த சிலர் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்திற்குள் வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவர். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையோர் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணித்து வருகிறோம்.

விருகம்பாக்கத்தில் பெண் காவலர்களிடம் தவறாக நடந்தவர்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டவுடன் உடனே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்துவிட்டோம். தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு. பெண் காவலர்களின் மீது தவறாக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com