ஆபத்து என்றால் உடனே ‘காவல் உதவி’ செயலியை பயன்படுத்துங்கள்: டிஜிபி சைலேந்திர பாபு

ஆபத்து என்றால் உடனே ‘காவல் உதவி’ செயலியை பயன்படுத்துங்கள்: டிஜிபி சைலேந்திர பாபு
ஆபத்து என்றால் உடனே ‘காவல் உதவி’ செயலியை பயன்படுத்துங்கள்: டிஜிபி சைலேந்திர பாபு

ஆபத்து காலத்திலோ, பாதுகாப்பில்லாத சூழலிலோ காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் அணுகும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது 'காவல் உதவி' எனும் செயலி.

ஏற்கெனவே காவலன் SOS எனும் செயலி பயன்பாட்டில் உள்ள நிலையில், காவல் உதவி செயலியில் பல சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 60 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக அவசர காலங்களில் உதவி தேவைப்படும் பெண்கள் அதில் இருக்கும் சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உதவி வேண்டுவோரின் விவரம், இருப்பிடம் உள்ளிட்டவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விரைவாக கிடைக்கும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆபத்து காலத்தில், காவல்துறையை எளிதாக அணுகுவதற்கு இதனைப்பயன்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com