தமிழ்நாடு
சிறப்பு காவல் படை தலைமையகம் திரும்புவது வழக்கமான நடவடிக்கை: டிஜிபி விளக்கம்
சிறப்பு காவல் படை தலைமையகம் திரும்புவது வழக்கமான நடவடிக்கை: டிஜிபி விளக்கம்
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரை அந்தந்த மாவட்டப் பிரிவுகளுக்கு திரும்ப உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கைதான் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறப்புக் காவல் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி முடிந்ததும் வழக்கமான பணிக்கு திரும்ப அறிவுறுத்துவது இயல்பான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக எந்தவித அசாதாரண சூழலையும் சந்திக்க, தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க உஷார் படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரை அந்தந்த மாவட்டப்பிரிவுகளுக்கு திரும்ப உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.