தமிழ்நாடு
காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் செயல்படுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார்.