\
சதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

சதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

சதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
Published on

சதுரகிரி மலைக்கோவிலுக்குச் சென்ற பக்தர்கள், வெள்‌ளத்தால் கீழே இறங்க முடியாமல் சிக்கி தவித்தனர். 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்‌ அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலிக்கு சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு‌ நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்றிருந்தனர். நேற்று மாலையில் திடீரென மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கிய பக்தர்கள், 50 பேர் சங்கிலி பாறை ஓடையை கடக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர்.

நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரையும் பத்திரமாக‌ மீட்டனர். மேலும் கோவிலுக்குச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com