திருப்பரங்குன்றம் - சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : கோயில் நிர்வாகம்

திருப்பரங்குன்றம் - சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : கோயில் நிர்வாகம்
திருப்பரங்குன்றம் - சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : கோயில் நிர்வாகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ஆம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வில் தொடங்கி 10-ஆம் தேதி மாலை பாவாடை தரிசனம் வரை கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் 8-ஆம் தேதி திங்கட்கிழமை வேல் வாங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வரும் 9ஆம் தேதி அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கெல்லாம் கோயில் நடை திறக்கப்பட்டு அதன்பின் 12:30 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் திருக்கோவில் நடை சாத்தப்படும்.

சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும் 9-ஆம் தேதியன்று 4:30 முதல் 5:30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வு திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெறும். நிகழ்ச்சியின்போது பக்தர்கள் யாரும் திருக்கோயில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அதன் பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றுதல் மற்றும் இரண்டாம் புறப்பாடு முடிந்த பின்னர் மாலை 7 மணிக்கு பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது திருப்பங்கன்றம் கோவில் நிர்வாகமும் அதை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com