இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு தடை

இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு தடை

இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு தடை
Published on

தஞ்சை பெரியகோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பிரதான கோயில்களிலும், ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 3ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை ஆகியவை அர்ச்சர்கர்கள், கோயில் அலுவலர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என, இது தொடர்பான செய்திக்குறிப்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்லணை, அணைக்கரை உள்ளிட்ட அனைத்து நீர்நிலை வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com