சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்கிறீர்களா? இதனை கவனத்தில் கொள்ளவும்!

சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்கிறீர்களா? இதனை கவனத்தில் கொள்ளவும்!
சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்கிறீர்களா? இதனை கவனத்தில் கொள்ளவும்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 28.4.22 (வியாழக்கிழமை) முதல் மே 1ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏறி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேறிச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com