”என்னையே முந்திட்டு போறியா?”.. துப்பாக்கியால் சுட்டு மோதல்! காரைக்குடியில் பரபரப்பு..

காரைக்குடியில் வாகனங்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காமாட்சி அம்மன் கோயில் பகுதி அருகே காரில் சென்றபோது, அதற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற கழனிவாசலைச் சேர்ந்த திருக்குமார் என்பவரை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த திருக்குமார் காரை விரட்டிச் சென்று மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய இரண்டு பேரில் ஒருவரான பைரவன், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தரையை நோக்கிச் சுட்டுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கீழே வீசப்பட்ட துப்பாக்கியைப் பறிமுதல் செய்த நிலையில் ராஜேஷ், பைரவன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com