பேருந்து இயக்கத்தில் மாற்றம்... எந்தப் பேருந்து எங்கிருந்து கிளம்பும்? முழு தகவல்...

கிளாம்பாக்கத்தில் எந்த மாவட்ட பேருந்து எந்த நடைமேடையில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்புதிய தலைமுறை

திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களுக்கு இன்று முதல் கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து, அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின்னர் தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் சென்றடையும். இந்த ஊர்களுக்கு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்

மாதவரம் பேருந்து முனையம் (MMBT) வரை இயக்கப்படும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக எம்.எம்.பி.டி-க்கு இயக்கப்படும். இன்று முதல் இந்த ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கிளாம்பாக்கத்தில் எந்த மாவட்ட பேருந்து எந்த நடைமேடையில் இருக்கும் என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வழியாக அறியலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com