திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமைweb

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை| மூன்று கட்டமாக நடந்த விசாரணை.. வெளியானது குற்றவாளியின் விவரங்கள்!

திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
Published on

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான குற்றவாளி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கைதான நபரிடம் காவல் துறையினர் 16 மணி நேரமாக விசாரணை நடத்திய பின்பு, அவர் வேலை பார்த்த சூலூர்பேட்டையில் உள்ள தாபாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சிறுமி வன்கொடுமை
சிறுமி வன்கொடுமை

பின்னர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் அவர் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

குற்றவாளியை உறுதிசெய்த சிறுமி..

திருவள்ளூரில் 8 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர்  அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், 13 நாட்கள் கழித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைpt

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் குற்றம் நந்த வீடியோவில் பதிவாகியுள்ள உருவத்தை ஒத்த ஒருவர் அதே உடையுடன் இருப்பதைக் கண்ட தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தான் குற்றவாளி என தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அனுப்பி ஊர்ஜிதப்படுத்திய காவல் துறையினர் அவரை நேற்று மாலை 6:30 மணி அளவில் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
தமிழகத்தை உலுக்கிய கிட்னி விற்பனை |"தெரியாமல் எடுத்தால்தான் திருட்டு" - அமைச்சர் மா.சு பேச்சு..!

விசாரணையில் தெரியவந்த விவரம்..

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்  திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.12 மணி நேரம் விசாரணை முடிந்த பின்பு மீண்டும் காலையில் 2-ஆம் கட்ட விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அவர் தாபாவில் பணிபுரிந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த தாபாவில் பணிபுரிந்த போது எத்தனை நாள் விடுப்பு எடுக்கப்பட்டது? சம்பவம் நடந்த அன்று அவர் எங்கே இருந்தார் என்பது குறித்து எல்லாம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த தாபாவின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குமுகநூல்

இந்த நிலையில் தாபாவில் விசாரணை முடிந்து கைதுசெய்யப்பட்ட நபர், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார். பின்பு அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச செல்லப்படுவதாக கூறிய நிலையில் மீண்டும் கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூன்றாம் கட்டமாக இந்த விசாரணை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகள் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை முடிந்து அவர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

14 நாட்களுக்கு பிறகு காவல் துறையினர் ஆந்திர எல்லையில் பதுங்கியிருந்த குற்றவாளியை கைது செய்த நிலையில் பொது மக்களும் சிறுமியின் உறவினர்களும் காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

இதனிடையே சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் விவரங்களை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் ராஜூ பிஸ்வ கர்மா என்பதும் 35 வயது என்பதும், அவர் அஸ்ஸாமை சேர்ந்தவர் என்பதும் வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
’என் தீர்ப்பு சாதி ரீதியில் உள்ளதா?’ நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் Vs வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.. பின்னணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com