ELECTION 2024 | தொகுதி அலசல் | நாமக்கல் மக்களவை தொகுதி பின்னணி?

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியின் பின்னணி குறித்தும் பார்த்து வருகிறோம். இதில் தற்போது நாமக்கல் தொகுதியின் பின்னணி குறித்து பார்ப்போம்.
நாமக்கல் மக்களவை தொகுதி
நாமக்கல் மக்களவை தொகுதி முகநூல்

1957 மற்றும் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களை நாமக்கல் மக்களவை தொகுதி எதிர்கொண்டது. இதில் 1957இல் திமுக வேட்பாளர் ஈவேகி சம்பத் பெற்று வெற்றிபெற்றார். 1962இல் காங்கிரஸ் வேட்பாளர் விகே ராமசாமி வெற்றிபெற்றார். இதன்பின் தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட நாமக்கல் தொகுதி 2008ஆம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.

ராசிபுரம், திருச்செங்கோடு மக்களவை தொகுதிகளில் இருந்த பகுதிகள் சேர்க்கப்பட்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. நாமக்கல், சங்ககிரி, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய 6 பேரவை தொகுதிகளை இம்மக்களவை தொகுதி உள்ளடக்கியுள்ளது.

நாமக்கல் மக்களவை தொகுதி
ELECTION 2024 | தொகுதி அலசல் | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் பின்னணி!

இதில் சேந்தமங்கலம் பழங்குடியினருக்கும் ராசிபுரம் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதி இதுவரை 3 முறை மக்களவை தேர்தலைசந்தித்துள்ளது. 2009இல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். காந்திசெல்வனும் 2014இல் அதிமுக வேட்பாளர் பிஆர் சுந்தரமும் வெற்றிபெற்றனர். 2019 இல் திமுக வேட்பாளர் ஏகேபி சின்ராஜ் வெற்றிபெற்றார்.

தற்போதைய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்  ஏகேபி சின்ராஜ்
தற்போதைய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி சின்ராஜ்

இவர் 6.26 லட்சம் வாக்குகளும் அதிமுக வேட்பாளர் காளியப்பன் 3.61 லட்சம் வாக்குகளும் பெற்றனர்.

நாமக்கல் மக்களவை தொகுதி
ELECTION 2024 | தொகுதி அலசல் | ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - முழு விவரம்!

நாம் தமிழர் வேட்பாளர் பாஸ்கர் 38 ஆயிரம் வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேலு 31 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com