ஆர்.கே.நகர்..... ஒரு எக்ஸ்ரே பார்வை

ஆர்.கே.நகர்..... ஒரு எக்ஸ்ரே பார்வை

ஆர்.கே.நகர்..... ஒரு எக்ஸ்ரே பார்வை
Published on

வடசென்னையின் முக்கியப்பகுதியாக விளங்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62ஆயிரத்து 721. இதில் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 307 பேர். ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 305. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 109 பேர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தின் 38 முதல் 43 வரையிலான வார்டுகள் மற்றும் 47-ஆவது வார்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியே ஆர்.கே.நகர் தொகுதி. இத்தொகுதியின் பரப்பளவு 6.24 சதுர கிலோமீட்டர். கூலித் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இங்கு ‌14 அம்மா உணவகங்கள் உள்ளன. இங்குள்ள மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 26.

மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏறத்தாழ 23 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகரில், 26 பொது சுகாதார கழிப்பிடங்கள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ மையங்களின் எண்ணிக்கை 12. சிறுவர்கள், இளைஞர்களின் வசதிக்காக 9 உடற்பயிற்சிக் கூடங்களும் வி‌ளையாட்டுத் திடல் ஒன்றும் உள்ளது. குறைந்த விலையில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வழங்க 4 அம்மா குடிநீர் மையங்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ளன.

கூட்ட நெரிசல்மிக்க இத்தொகுதியில் இரண்டே இரண்டு மேம்பாலங்கள் மட்டுமே உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன ஆர்.கே.நகரில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 14 அம்மா உணவகங்களும், 4 அம்மா குடிநீர் மையங்களும் கடந்த 3 ஆண்டுகளில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொகுதியின்‌ பெரும்பாலான சாலைகள் கான்கீரிட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. வைத்தியநாதன் பாலம் அருகே மிகப்பெரிய மேம்பாலம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், பழமையான வீடுகளில் வசிக்கும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை இதுவரை நிறைவேற்றப‌படவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள்.

குடிநீரில் அடிக்கடி கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுதவிர, தொகுதியின் உட்புற பகுதிகளையும் இணைக்கும்வகையில் பேருந்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,721

பெண் வாக்காளர்கள் - 1,34,305

ஆண் வாக்காளர்கள் - 1,28,305

மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 109

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com