திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இளைஞர் - மதுரையில் சோக நிகழ்வு

திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
file image
file imagept web

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் ராஜராஜன். இவர் மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ராஜராஜன் தனியாக வசித்து வந்துள்ளார்.

file image
file imagept web

மேலும், கடந்த வாரம் ராஜராஜனின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் ராஜராஜன் மேலும் மன உளைச்சளுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு வந்த ராஜராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராஜராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com