பாழாகும் கொடைக்கானல் ஏரி: கரை ஒதுங்கும் கழிவுகள்

பாழாகும் கொடைக்கானல் ஏரி: கரை ஒதுங்கும் கழிவுகள்

பாழாகும் கொடைக்கானல் ஏரி: கரை ஒதுங்கும் கழிவுகள்
Published on

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஏரியில் கரை ஒதுங்கும் கழிவுகளை ஆய்வு செய்ய நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் ஏரிக்கரையில் அமைந்துள்ள விடுதிகளிலிருந்து இரவு நேரங்களில் ஏரித்தண்ணீரில் கழிவுகள் கலப்பதாக நீண்ட நாட்களாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டி வருவதையடுத்து கரையோரமாக மனிதக்கழிவுகள் போன்றவை கரை ஒதுங்கி வருகின்றன. அதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் சரவணன் உறுதியளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com