தமிழ்நாடு
கொரோனா சிகிச்சையில் வீடு திரும்பிய துணை ஆணையர் : கைதட்டி வரவேற்ற மக்கள்
கொரோனா சிகிச்சையில் வீடு திரும்பிய துணை ஆணையர் : கைதட்டி வரவேற்ற மக்கள்
கொரோனா அறிகுறி இல்லாததால், சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னை காவல்துறை துணை ஆணையர் ஒருவருக்கு கடந்த 4ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். வீடு திரும்பிய அவரை குடியிருப்பு வாசிகள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதனைக் கண்ட துணை ஆணையர் நெகிழ்ச்சியில் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.